For the first time six Indian players opted for CBSE.
இந்தியா சார்பில் பல்வேறு போட்டிகளில் விளையாடிய ஆறு வீரர்களுக்கு முதன்முறையாக தனியாக தேர்வுகளை நடத்தியது சிபிஎஸ்இ அமைப்பு.
பத்தாம் வகுப்பு மாணவன் அனிஷ் பன்வாலா, கே.வெங்கடாத்ரி, மாணவியர் சேஹாபிரீத், ரேகா ஆகியோர் பல்வேறு போட்டிகளில் இந்தியாவுக்காக பங்கேற்று விளையாடினர். அனிஷ் பன்வாலா காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
டாக்காவில் நடந்த தெற்காசிய வில்வித்தை போட்டியில் விஜயவாடா மாணவன் வெங்கடாத்ரி மூன்று பதக்கங்களையும், பாட்டியாலாவின் சேஹாபிரீத்தும் சர்வதேச வில்வித்தை போட்டியில் தங்கம் வென்றிருந்தார்.
டெல்லி மாணவி ரேகா வீல்சேகர் கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றிருந்தார்.
அதேபோல 12-ஆம் வகுப்பு பயிலும் லக்னோவைச் சேர்ந்த அமோலிக்க சிங் டச் ஓபன் ஜூனியர் பாட்மிண்டன் போட்டியிலும், மானவ் தாக்கர் ஆசியக் கோப்பை போட்டியிலும், பங்கேற்று யூத் ஓலிம்பிக்ஸ் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இந்த ஆறு பேரும் பொதுத் தேர்வுகள் நடைபெற்றபோது எழுதவில்லை. நாட்டுக்காக விளையாட சென்றிருந்தனர். இந்த நிலையில் இந்திய விளையாட்டு ஆணையம் பரிந்துரையின்பேரில் அனைவருக்கும் தனியாக தேர்வுகள் நடத்த சிபிஎஸ்இ முன்வந்தது. அதன்பேரில் இந்த 6 பேருக்கும் தனியாக தேர்வுகள் நடத்தப்பட்டன.
