For the first time in the Super Series badminton tournament crowned piranit tilt
சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் முதல்முறையாக இந்தியாவின் சாய் பிரணீத் வாகைச் சூடினார்.
சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நேற்று நடைபெற்றது.
இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றில் சாய் பிரணீத் மற்றும் சகநாட்டவரான ஸ்ரீகாந்த் ஆகியோர் மோதினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 21-17 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்த் கைப்பெற்றினார். பின்னர் நடைபெற்ற 2-ஆவது செட்டின் ஆரம்பத்தில் ஸ்ரீகாந்த் 4-1 என முன்னிலை பெற்றார்.
பிறகு சாய் பிரணீத் அசத்தலான ஆட்டத்தால் இருவரும் 10-10 என்ற கணக்கில் சமநிலையை எட்டினர். தொடர்ந்து அபாரமாக ஆடிய சாய் பிரணீத் 21-17 என்ற கணக்கில் 2-ஆவது செட்டை கைப்பற்றினார்.
3-ஆவது செட்டில் சாய் பிரணீத் 21-12 என்ற கணக்கில் கைப்பற்றி வாகை சூடினார்.
அதன்படி இந்த செட்டை, 17-21, 21-17, 21-12 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்தை வீழ்த்தி சாய் பிரணித் வென்றார்.
சூப்பர் சீரிஸ் போட்டி ஒன்றின் இறுதிச் சுற்றில் இரு இந்தியர்கள் மோதியது இதுவே முதல்முறையாகும்.
மேலும், சாய் பிரணீத் சூப்பர் சீரிஸ் போட்டி வெற்றிப் பெறுவதும் இதுவே முதல்முறை.
