First Women T-20 Tournament in Mumbai today

இந்திய மற்றும் அயல்நாட்டு வீராங்கனைகள் கலந்து கொள்ளும் முதலாவது மகளிர் டி-20 காட்சிப் போட்டி மும்பையில் இன்று நடைபெறுகிறது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. மேலும், வலிமையான இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளையும் பல்வேறு போட்டிகளில் வென்றது. 

இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடந்து வருகிறது. மகளிர் சார்பிலும் கிரிக்கெட் லீக் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. 

எனவே, மகளிர் டி-20 போட்டிகளை பிரபலப்படுத்தும் வகையில் காட்சிப் போட்டி நடத்தப்படுகிறது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பிரபல வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

ஐபிஎல் டிரப்லைசர்ஸ் மற்றும் ஐபிஎல் சூப்பர்நோவா என இரு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டிரப்லைசர்ஸ் அணிக்கு ஸ்மிருதி மந்தானாவும், சூப்பர்நோவாவுக்கு ஹர்மன்பிரீத் கௌரும் கேப்டன்களாக செயல்படுவர். 

மேலும், முன்னணி வீராங்கனைகளான சூசி பேட்ஸ், அலிஸா ஹீலி, பெத் மூனி, எல்சிபெரி, மேகன் ஷூல்ட்ஸ், டேனியல் வயாட் போன்ற அயல்நாட்டு வீராங்களையும் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.