புதுடெல்லி,

அப்ரிடியின் சுயசரிதை 2017-ஆம் புத்தகமாக வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான அப்ரிடி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.

20 ஓவர் போட்டிக்கான அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வரும் அவர் இன்னும் ஓய்வு முடிவை அறிவிக்கவில்லை.

ஒருநாள் போட்டியில் குறைந்த பந்தில் (1996–ம் ஆண்டில் 37 பந்துகளில்) சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமைக்குரிய அப்ரிடி, ஒருநாள் போட்டியில் அதிக சிக்சர் அடித்தவர் ஆவார்.

20 ஓவர் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் மற்றும் அதிக ஆட்டநாயகன் விருது பெற்றவர் என்ற சிறப்புக்கும் சொந்தக்காரர் ஆவார்.

36 வயது ஆல்–ரவுண்டரான அப்ரிடியின் சுயசரிதை புத்தகம் அடுத்த ஆண்டு (2017) வெளியாகிறது.

இதில் அப்ரிடியின் கிரிக்கெட் வாழ்க்கை மட்டுமின்றி அவரை பற்றி வெளிவராத பல அரிய தகவல்களும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோனி, சச்சினின் சுயசரிதைகளைத் தொடர்ந்து அவர்களின் வாழ்க்கையை படமாக எடுத்துள்ளனர். அப்ரிடியின் வாழ்க்கைப் பற்றிய சுயசரிதை புத்தகமாக வெளியிடப்படுகிறது. யாருக்குத் தெரியும் இவரது சுயசரிதையும் படமாக எடுக்கப்படலாம்…