Federer won his title for the fifth time in intiyanvels

இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் ஐந்தாவது முறையாக பட்டம் வென்றார்.

அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடைபெற்று வந்த இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், சகநாட்டவரான ஸ்டான் வாவ்ரிங்காவுடன் மோதினார் ஃபெடரர்.

இருவருக்கும் இடையே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில், 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ஃபெடரர் வெற்றி பெற்றார்.

ஃபெடரர், தனது வெற்றிக்குப் பிறகு கோப்பையை பெறும் நிகழ்ச்சியில் கூறியது:

“இது மிகவும் அற்புதமான வாரமாக மாறியுள்ளது. ஆஸ்திரேலிய ஓபனில் வென்றபோது ஆச்சர்யம் அடையவில்லை. ஆனால், இண்டின்வெல்ஸ் வெற்றி, இங்கு ஆடிய விதம் எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

என்னால் மிகவும் சந்தோஷமாக உணர முடியவில்லை. ஏனெனில், இது இந்த ஆண்டுக்கான மிகப்பெரிய தொடக்கம்.

கடந்த ஆண்டு பிரிஸ்பேன் போட்டியைத் தவிர எந்தவொரு போட்டியின் இறுதிச் சுற்றுக்கு கூட முன்னேறவில்லை. அந்த வகையில், இப்போதைய இந்த வெற்றியை அருமையானதாக உணர்கிறேன்” என்று ஃபெடரர் கூறினார்.