தோல்வி பயத்தில் இங்கிலாந்து..! 

இந்திய அணி மற்றும் எதிர்கொள்ள இருக்கும் 50 ஓவருக்கான  உலகக்கோப்பை பற்றியும் இங்கிலாந்து கிரிக்கெட் கேப்டன் மோர்கன் சில கருத்தை தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. தற்போது ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் இங்கிலாந்து இந்த முறை உலகக் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு பெரும் சவாலாக இருக்கும் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

இது பற்றி மோர்கன் தெரிவிக்கும் போது, "உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இந்த முறை உலக கோப்பையை வெல்ல எங்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் இந்திய அணி உலகின் எந்த மூலையில் விளையாடினாலும் அது தன் சொந்த மைதானம் போலவே நினைத்து சவாலாக விளையாடும். எனவே எங்களுக்கு சவாலான ஒரு விஷயம் என்றால் இந்தியாதான். மேலும் எங்கள் அணியை வலுவான அணியாக உருவாக்கி வருகிறோம். கடந்த இரண்டு வருடங்களில் நாங்கள் விளையாடியதில் எங்களுக்கு சவாலாக இருந்த அணி இந்திய அணி"

இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளுமே உலக கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ளதால் வரும் போட்டியை எப்படி எதிர்கொள்வது என்ற ஆவல் இப்போது கிளம்பி உள்ளது மற்றும் அது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது என தெரிவித்துள்ளார் கேப்டன் மோர்கன்