மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவைச் சேர்ந்த சகோதரிகளான வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிச் சுற்றில் நாளை மோதுகின்றனர்.

உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் தனது அரையிறுதியில் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் குரோஷியாவின் லூசிச் பரோனியை தோற்கடித்தார்.

வீனஸ் வில்லியம்ஸ் தனது அரையிறுதியில் 6-7 (3), 6-2, 6-3 என்ற செட் கணக்கில் சகநாட்டவரான கோகா வான்ட்வேக்கை தோற்கடித்தார்.

நாளை நடைபெறும் இறுதிச் சுற்றில் வீனஸ் வில்லியம்ஸும், செரீனா வில்லியம்ஸும் மோதவுள்ளனர்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இருவரும் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிச் சுற்றில் மோதவுள்ளனர்.

இதற்கு முன்னர் இவர்கள் இருவரும் 8 முறை கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிச் சுற்றில் மோதியுள்ளனர். அதில் செரீனா 6 முறையும், வீனஸ் இரு முறையும் வெற்றி கண்டுள்ளனர்.

இந்த முறை செரீனா பட்டம் வெல்லும் பட்சத்தில் இது அவருடைய 23-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமையும். இதன்மூலம் "ஓபன் எரா'வில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான ஸ்டெஃபி கிராஃபின் சாதனையை முறியடிப்பார்.