ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் மும்பைக்கு எதிராக முதலில் பேட் செய்த தமிழக அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தமிழக அணியில் தொடக்க வீரர்களான ராஜூ 19, கேப்டன் அபிநவ் முகுந்த் 38 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதன்பிறகு கெüஷிக் காந்தி - இந்திரஜித் ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 110 ஓட்டங்கள் சேர்த்தது.

இந்திரஜித் 64, காந்தி 50 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் 16, அபராஜித் 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

ஆட்டநேர முடிவில் தமிழக அணி 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

சங்கர் 41, அஸ்வின் கிறிஸ்து 9 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.

மும்பை தரப்பில் ஷ்ரதுல் தாக்குர், அபிஷேக் நய்யார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.