மகளிர் ஒற்றையர் டென்னிஸ் தரவரிசையில் ஸ்லோவேகியாவின் டொமினிகா சிபுல்கோவா 8-வது இடத்தில் இருந்து முன்னேறி 5-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

டபிள்யூடிஏ பைனல்ஸ் என்றழைக்கப்படும் மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்றதன் மூலம் 8-ஆவது இடத்தில் இருந்து 5-ஆவது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளார் டொமினிகா.

டபிள்யூடிஏ பைனல்ஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பரை வீழ்த்தி டொமினிகா சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

ஏஞ்ஜெலிக் கெர்பர் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா, ருமேனியாவின் சைமோனா ஹேலப் ஆகியோர் முறையே 2, 3, 4-ஆவது இடங்களில் உள்ளனர்.

அதேநேரத்தில் செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா, அமெரிக்காவின் மேடிசன் கீஸ் ஆகியோர் தலா ஓர் இடத்தை இழந்து முறையே 6, 7, 8-ஆவது இடங்களில் உள்ளனர்