Asianet News TamilAsianet News Tamil

தோனி எந்த வரிசையில் இறங்குறதுனு மத்தவங்க சொல்றதுலாம் இருக்கட்டும்.. அவரு என்ன சொல்றாருனு பாருங்க

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலிரண்டு போட்டிகளிலும் ஐந்தாம் வரிசையில் இறக்கப்பட்ட தோனி, மெல்போர்னில் நடந்த கடைசி போட்டியில் நான்காம் வரிசையிலேயே இறக்கப்பட்டார். 

dhoni speaks about his batting order
Author
Australia, First Published Jan 19, 2019, 11:37 AM IST

கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஃபார்மில் இல்லாமல் தவித்து வந்த தோனி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக ஆடி, மூன்று போட்டிகளிலும் அரைசதம் அடித்து மீண்டும் தான் ஒரு பெஸ்ட் ஃபினிஷர் என்பதை நிரூபித்துள்ளார். 

ஆஸ்திரேலிய தொடரில் தோனியின் சிறப்பான பேட்டிங் அணிக்கும் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ள அதேவேளையில், அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்த விவாதத்தையும் எழுப்பியுள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலிரண்டு போட்டிகளிலும் ஐந்தாம் வரிசையில் இறக்கப்பட்ட தோனி, மெல்போர்னில் நடந்த கடைசி போட்டியில் நான்காம் வரிசையிலேயே இறக்கப்பட்டார். நான்காம் வரிசை வீரருக்கான மிக நீண்ட தேடுதல் படலத்திற்கு பிறகு அந்த இடத்திற்கு ராயுடு உறுதி செய்யப்பட்டார். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அவர் சோபிக்கவில்லை. முதலிரண்டு போட்டிகளில் நான்காம் வரிசையில் சரியாக ஆடாத ராயுடுவுக்கு பதிலாக கேதர் ஜாதவ் அணியில் சேர்க்கப்பட்டு, நான்காம் வரிசைக்கு தோனி புரமோட் செய்யப்பட்டார். தோனி பொதுவாக களத்தில் நிலைப்பதற்கு பந்துகளை எடுத்துக்கொள்ளும் வீரர் என்பதால், நின்று நிதானமாக ஆட அவருக்கு அந்த இடம் சரியாக அமைந்துவிட்டது. அவரும் நன்றாக ஆடினார். 

dhoni speaks about his batting order

இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆகிய இரண்டு போட்டிகளிலுமே கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று அணியை வெற்றி பெற செய்தார். தோனி ஃபார்மில் இல்லாதது பிரச்னையாக இருந்த நிலையில், தோனி ஃபார்முக்கு வந்திருப்பதும் பிரச்னையாக அமைந்துள்ளது. தோனியை எந்த இடத்தில் இறக்குவது என்பதுதான் அது. 

தோனி முதல் போட்டியில் அரைசதம் அடித்த போதே, அவரை நான்காம் வரிசையில் இறக்கவேண்டும் என்பதே தனது தனிப்பட்ட கருத்து என்று ரோஹித் சர்மா அதிரடியாக தெரிவித்தார். தற்போது அதே கருத்தை முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும் தெரிவித்துள்ளார். ஆனால் தோனி 5ம் வரிசையில் இறங்குவதன் மூலம், அவருக்கு தேவையான நேரமும் கிடைக்கும், போட்டியை வெற்றிகரமாக முடித்து வைத்து அவரது ஃபினிஷர் வேலையையும் செய்ய முடியும் என்பதால் 5ம் வரிசைதான் தோனிக்கு சரியான இடம் என கருதுவதாக கேப்டன் கோலி தெரிவித்துள்ளார். 

dhoni speaks about his batting order

இவ்வாறு தோனியின் பேட்டிங் ஆர்டர் குறித்து மிகத்தீவிர விவாதங்கள் நடந்துவரும் நிலையில், அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். தனது பேட்டிங் ஆர்டர் குறித்து பேசிய தோனி, நான்காம் வரிசையில் பேட்டிங் ஆடுவது நன்றாகத்தான் உள்ளது. நான் 6ம் வரிசையில் ஆடினால், வேறு ஒருவர் 4ம் வரிசையில் ஆடுவார். இந்த பேட்டிங் வரிசையை மாற்றிக்கொள்வது அணியின் நிலைத்தன்மையை கெடுத்துவிடாமல் இருக்க வேண்டும். எந்த வரிசையில் இறங்குகிறோம் என்பது முக்கியமல்ல, எந்த வரிசையில் ஆடினாலும் அந்த வேலையை சரியாக செய்தோமா என்பதுதான் முக்கியம். நான் எந்த வரிசையிலும் இறங்கி ஆட தயாராக உள்ளேன். எந்த வரிசையில் ஆடினாலும் எனக்கு மகிழ்ச்சிதான். 14 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடிவிட்ட பிறகு, எந்த வரிசையிலும் இறங்க தயக்கம் காட்டவோ மறுக்கவோ முடியாது. எனவே அணியின் தேவைக்கேற்றபடி எந்த வரிசையிலும் இறங்க தயாராகவே உள்ளேன் என்று தோனி தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios