Asianet News TamilAsianet News Tamil

இதுதான் என் முதல் காதலியின் பெயர்.. ஷாக்ஸியிடம் சொல்லிடாதீங்க!! மனம் திறந்த தோனி

dhoni revealed his first crush
dhoni revealed his first crush
Author
First Published May 10, 2018, 1:22 PM IST


இரண்டு ஆண்டுகால தடைக்கு பிறகு இந்த ஐபிஎல் சீசனில் களமிறங்கியுள்ள சென்னை அணி, தோனியின் தலைமையில் அசத்திவருகிறது. 10 போட்டிகளில் 7ல் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளது.

தோனியும் சிறந்த ஃபார்மில் இருப்பதால், சென்னை ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். போட்டிகளுக்கு இடையே தோனி மற்றும் சென்னை அணியின் வீரர்கள் தனியார் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கின்றனர்.

நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் தோனியின் முதல் காதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஒளிவுமறைவு இல்லாமல் வெளிப்படையாக தனக்கே உரிய பாணியில் பதிலளித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

முதல் காதல் குறித்த கேள்விக்கு பதிலளித்த தோனி, அந்த பெண்ணின் பெயரில் "A" இருக்கும். எல்லா பெண்களின் பெயரிலும் பெரும்பாலும் "A" இருக்கும்.. அவரது பெயரில் மூன்றாவது எழுத்து "A". அவர் பெயர் சுவாதி(SWATHY). கடைசியாக நான் அவரை பார்த்தது 12ம் வகுப்பில் தான்.. எனது மனைவியிடம் இதை பற்றி சொல்லிவிடாதீர்கள் என தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில், தோனியுடன் ஷேன் வாட்சன், ஜடேஜா, சுரேஷ் ரெய்னா ஆகியோர் உடனிருந்தனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios