Dhoni anything do not need to prove to anyone Former Australian cricketer

தோனி எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய தேவையில்லை என்று அவருக்கு ஆதரவாக தோனியின் ரசிகன் போல முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பத்தாவது ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், புணே அணி கேப்டன் பதவியில் இருந்து தோனி நீக்கப்பட்டார். மேலும், அவரது ஆட்டம் தொடர்பாக பல்வேறு தரப்புகளில் இருந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

சமீபத்தில், 'தோனி டி-20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திது இல்லை' என்றும், அவரை சிறந்த கேப்டன் என்று ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி பகிரங்கமாக தெரிவித்தார்.

இந்த நிலையில், தோனிக்கு ஆதரவாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே கருத்து தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில், 'தோனி எதையும், யாருக்கும் நிரூபிக்க வேண்டிய தேவையில்லை. டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்துப் போட்டிகளிலும் அவர் அற்புதமாக விளையாடக் கூடிய வீரர். தோனி, மிகச்சிறந்த கேப்டனும் கூட” என்று தோனியின் ரசிகன் போல அந்த பதிவை பதிவிட்டுள்ளார்.