dhawan crossed four thousand runs in ipl

ஐபிஎல் தொடரில் 4000 ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில் ஷிகர் தவானும் இணைந்துள்ளார்.

ஐபிஎல் 11வது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை அணியும் ஹைதராபாத் அணியும் இறுதி போட்டியில் மோதுகின்றன. நாளை இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இறுதி போட்டி நடைபெறுகிறது. 

இரண்டாவது தகுதி சுற்றில் கொல்கத்தா அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் ஹைதராபாத் வீரர் ஷிகர் தவான் 34 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியின் மூலம் ஐபிஎல்லில் 4000 ரன்களை கடந்தார் ஷிகர் தவான். இந்த சீசனில் இதுவரை 15 போட்டிகளில் ஆடி 471 ரன்களை குவித்துள்ளார் ஷிகர் தவான்.

ஐபிஎல்லில் 4000 ரன்களை கடந்த 8வது வீரர் ஷிகர் தவான். 7வது இந்திய வீரர். 

ஷிகர் தவானுக்கு முன்னதாக முன்னதாக விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, கௌதம் காம்பீர், உத்தப்பா, டேவிட் வார்னர், தோனி ஆகிய 7 வீரர்களும் 4000 ரன்களை கடந்துள்ளனர். 

இந்த சீசனில் பஞ்சாப்புக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் தான் தோனி, 4000 ரன்களை கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.