devilliers come back and south africa will play in pink jersey

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.

பேட்டிங்கில் கோலியும், பவுலிங்கில் ரிஸ்ட் ஸ்பின்னர்களான சாஹல் மற்றும் குல்தீப்பும் மிரட்டி வருகின்றனர். மூன்று போட்டிகளிலும் சேர்த்து இரு ரிஸ்ட் ஸ்பின்னர்களும் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளனர்.

இந்திய அணியின் சிறப்பான செயல்பாடு ஒருபுறமிருக்க, தென்னாப்பிரிக்க அணியில் சீனியர் வீரர்களான டிவில்லியர்ஸ், டுபிளெசிஸ், ஸ்டெயின் ஆகியோர் இல்லாததும் அந்த அணியின் படுதோல்விக்கு முக்கியமான காரணம்.

3-0 என கடுமையாக பின் தங்கி இருக்கும் தென்னாப்பிரிக்க அணி, அடுத்த போட்டியில் தோற்றால் தொடரை இழந்துவிடும். இந்நிலையில், காயத்தால் முதல் மூன்று போட்டிகளில் ஆடாத டிவில்லியர்ஸ் நாளை நடக்கும் நான்காவது போட்டியில் விளையாடுகிறார்.

அதுமட்டுமல்லாமல், 4வது போட்டி, பிங்க் போட்டி என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக பச்சை ஆடை அணிந்து விளையாடும் தென்னாப்பிரிக்கா, நாளை பிங்க் நிற ஆடை அணிந்து விளையாடும். பிங்க் நிற ஆடையில் இதுவரை தென்னாப்பிரிக்கா தோற்றதே இல்லை. அந்த அணிக்கு இதுவும் டிவில்லியர்ஸ் வருவதும் பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. எனவே நாளை நடைபெறும் நான்காவது போட்டி கடுமையாக இருக்கும்.