ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இந்திய அணி, அந்த தொடர் முடிந்தவுடன் அப்படியே நியூசிலாந்திற்கு சென்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. 

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. 3 டி20 போட்டிகள் முடிந்துவிட்ட நிலையில், டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகள் முடிந்துள்ளன. மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 26ம் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் ஜனவரி 12ம் தேதி முதல் ஒருநாள் போட்டியும் 15 மற்றும் 18 ஆகிய தேதிகளில் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகள் நடக்கின்றன. 

ஜனவரி 18ம் தேதியுடன் ஆஸ்திரேலிய தொடர் முடிவடையும் நிலையில், 23ம் தேதி நியூசிலாந்து தொடர் தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவிலிருந்து இந்திய ஒருநாள் போட்டிக்கான அணி, அப்படியே நியூசிலாந்து செல்கிறது. நியூசிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி ஆடுகிறது. 

நியூசிலாந்து தொடருக்கான கால அட்டவணை:

ஜனவரி 23 - முதல் ஒருநாள் போட்டி

ஜனவரி 26 - இரண்டாவது ஒருநாள் போட்டி

ஜனவரி 28 - மூன்றாவது ஒருநாள் போட்டி

ஜனவரி 31 - நான்காவது ஒருநாள் போட்டி

பிப்ரவரி 3 - ஐந்தாவது ஒருநாள் போட்டி.

அனைத்து ஒருநாள் போட்டிகளுமே இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. 

பிப்ரவரி 6 - முதல் டி20 போட்டி (மதியம் 12.30 மணி)

பிப்ரவரி 8 - இரண்டாவது டி20 போட்டி(மதியம் 11.30 மணி)

பிப்ரவரி 10 - மூன்றாவது டி20 போட்டி(மதியம் 12.30 மணி).