ஐபிஎல் 12வது சீசனுக்கான ஏலத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு கடும் கிராக்கி நிலவியது. 

ஐபிஎல் 12வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. அதற்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் நடந்துவருகிறது. இந்த ஏலத்தில் பிரண்டன் மெக்கல்லம், மெக்கல்லம், யுவராஜ் சிங், கிறிஸ் வோக்ஸ், மார்டின் கப்டில், அலெக்ஸ் ஹேல்ஸ் போன்ற வீரர்களை அடிப்படை விலைக்குக்கூட எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை. அதேநேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு அதிக கிராக்கி இருந்தது. 

வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் அதிரடி வீரர் ஹெட்மயர், வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர்கள் பிராத்வெயிட், நிகோலஸ் பூரான் ஆகியோர் அதிகமான விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கத் அதிகபட்சமாக 8.4 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். இவருக்கு அடுத்தபடியாக அதிகமான விலைக்கு ஏலம் போனவர் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் பிராத்வெயிட். பிராத்வெயிட்டை ரூ.5 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. 

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை ரூ.4.8 கோடிக்கு பஞ்சாப் அணி எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் அதிரடி வீரர் ஹெட்மயரை ரூ.4.2 கோடிக்கு ஆர்சிபி அணியும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் மற்றொரு ஆல்ரவுண்டர் நிகோலஸ் பூரானை அதே ரூ.4.2 கோடிக்கு பஞ்சாப் அணியும் எடுத்தன. 

ஏலம் தொடங்கிய முதல் ஒன்றரை மணி நேர நிலவரப்படி, அதிக விலைக்கு ஏலம் போன முதல் 5 வீரர்களில் மூன்று பேர் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்.