Asianet News TamilAsianet News Tamil

ஐபிஎல் போட்டியில் இந்தாண்டு டெல்லி டேர்டேவில்ஸ் பட்டம் வெல்லும் - பயிற்சியாளர் நம்பிக்கை...

Delhi Daredevils win this year IPL
Delhi Daredevils win this year IPL
Author
First Published Apr 6, 2018, 11:24 AM IST


ஐபிஎல் போட்டிகளில் இந்தாண்டு டெல்லி டேர்டேவில்ஸ் அணி பட்டம் வெல்லும் என்று அதன் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டெல்லி டேர்டேவில்ஸ்  தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள பாண்டிங் நேற்று செய்தியாளர்களிடம், "கெளதம் காம்பீர் தலைமையில் டேர் டெவில்ஸ் அணி இந்த முறை சாம்பியன் பட்டத்தை வெல்லும். 

அணியின் முந்தைய நிலை குறித்து கவலையில்லை.

தற்போது புதிய வீரர்களைக் கொண்ட குழு உள்ளது. வீரர்கள் அனைவரும் நன்றாக தயார்படுத்திக் கொண்டுள்ளனர்.

களத்தில் திட்டங்களை செயல்படுத்தினால் வெற்றி பெறலாம்" என்று அவர் கூறினார். 

டேர்டெவில்ஸ் அணி கடந்த 10 போட்டிகளிலும் குறிப்பிடத்தக்க வெற்றி எதையும் பெறவில்லை.

இரண்டு முறை அரையிறுதிச் சுற்றுக்கு மட்டுமே முன்னேறியது.

இந்த நிலையில் டெல்லி டேர்டெவில்ஸ்அணி வீரரும், தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளருமான காகிசோ ரபடா முதுகு காயம் காரணமாக போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios