ஐபிஎஸ் சீசன் 2018 –ல் விளையாடுவதற்காக தற்போது சென்னைக்கு மீண்டும் வருவது எனது வீட்டுக்கு வருவதைப் போன்று உள்ளது என  மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் பிராவோ தெரிவித்தார்.

அதிரடியாக விளையாடக் கூடியவர் பிராவோ. கிரிக்கெட் மைதானத்தில் அவர் செய்யும் சேட்டைகளும், ரியாக்சன்களும் ரசிகர்களை உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்திவிடும். அதுவும் எதிர் டீமில் இருக்கும் தனது மேற்கிந்திய தீவு வீரர்களை பிராவோ செமையாக கலாய்ப்பார். இதற்காகவே அவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் ஒன்று உள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் சீசன் 2018 ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் சீசனில் விளையாடவுள்ள வெளிநாட்டு வீரர்கள் அவர்கள் இடம்பெற்றுள்ள அணிகள் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ சென்னையில் தன்னுடைய சக அணி வீரரான முரளி விஜய்யுடன் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிராவோ,  சென்னைக்கு வருவது என்பது என் சொந்த வீட்டுக்கு வருவதைப் போன்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் இதை மிஸ் பண்ணியிருந்தேன் என்றார்.

என் மீது நம்பிக்கை வைத்து அணியில் மீண்டும் பங்கேற்க வைத்த அணியின் நிர்வாகத்துக்கு நன்றி தெரிவிப்பதாகம் இந்த சீசனில் . சிறப்பாக விளையாடுவேன் என்றும் பிராவோ தெரிவித்தார்.