csk played and won in first and last ipl league matches
ஐபிஎல் 11வது சீசன் விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. முதல் நான்கு இடங்களை பிடித்த ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றுள்ளன. மும்பை, பெங்களூரு, பஞ்சாப், டெல்லி ஆகிய 4 அணிகளும் தொடரை விட்டு வெளியேறியுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் 7ம் தேதி தொடங்கிய ஐபிஎல் நேற்றுடன் லீக் போட்டிகள் முடிவடைந்தன. கடைசி இரண்டு போட்டிகள் நேற்று நடைபெற்றன. அவற்றில், நேற்று மாலை நடந்த ஒரு போட்டியில் மும்பை அணியும் டெல்லி அணியும் மோதின. அதில், டெல்லி வெற்றி பெற்றது.
இரவு 8 மணிக்கு நடந்த போட்டியில் சென்னையும் பஞ்சாப்பும் மோதின. சென்னை அணி வெற்றி பெற்றது. கடந்த ஏப்ரல் 7ம் தேதி தொடங்கிய இந்த சீசனின் முதல் போட்டியிலும் சென்னை அணி தான் வெற்றி பெற்றது. முதல் போட்டி, சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்றது. அதில் மும்பையை வீழ்த்தி சென்னை அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது.
அதேபோல கடைசி போட்டியிலும் சென்னை அணி விளையாடியது. கடைசி லீக் போட்டியிலும் பஞ்சாப் அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் லீக் போட்டிகளை வெற்றியுடன் தொடங்கி வெற்றியுடன் முடித்திருக்கிறது தோனி தலைமையிலான சென்னை படை.
