CSK is my favorite team said dinesh karthick
CSK தான் என்னோட மாபெரும்கனவு.... ! மனம் திறந்த தினேஷ் கார்த்திக்...!
தனக்கு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் விளையாட வேண்டும் என்பது தான் தன்னுடை மாபெரும் கனவு என தெரிவித்தார்
1 நிமிடத்தில் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த வீரத்தமிழன் தினேஷ் கார்த்திக் என தமிழக கிரிக்கெட் வீரரை பாராட்டி தள்ளி விட்டனர் ரசிகர்கள்
இந்தியா,இலங்கை,பங்களாதேஷ் இடையேயான முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் இந்திய அணிகள் மோதின. 20 ஓவர்களில் பங்களாதேஷ் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது
கடைசி நேர ஆட்டம்
தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 29 ரன்கள் அடித்து வெற்றியை இந்திய அணிக்கு பறித்துக் கொடுத்தார்.
கடைசி பந்தில் 5 ரன் தேவை என்ற நிலையில், தினேஷ் சிக்சர் விளாசி வெற்றியை உறுதி செய்தார்.
கடையில் இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தினேஷ் கார்த்திக், தனக்கு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் விளையாட வேண்டும் என்பது தான் தன்னுடை மாபெரும் கனவு என தெரிவித்தார்.
ஒரே நாளில் அனைவரின் கவனத்தை பெற்றதோடு இந்தியாவிற்கு மாபெரும் பெருமை சேர்த்து விட்டார் தினேஷ் கார்த்திக்.
