சென்னை அணி மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. சென்னை அணி வென்ற ஐபிஎல் கோப்பையை வைத்து அணி நிர்வாகிகள், சென்னை தி.நகர் பெருமாள் கோவிலில் பூஜை செய்தனர்.

இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு ஐபிஎல் 11வது சீசனில் தோனி தலைமையில் மீண்டும் களமிறங்கிய சென்னை அணி, வாட்சனின் அதிரடியால் கோப்பையை வென்று அசத்தியது. 

கோப்பையுடன் நேற்று சென்னை வந்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டு, நட்சத்திர ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டனர். அணி நிர்வாகத்தினர், நிர்வாகத்தினருக்கு நெருங்கியவர்கள் ஆகியவர்களுடன் வீரர்களுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. 

அதன்பிறகு இன்று காலை சென்னை அணியின் நிர்வாகிகள், தி.நகரில் உள்ள பெருமாள் கோவிலில் கோப்பையை வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனர்.