Comparing with the image of Collie Animals Australia Media atrocity
நாய், பூனை, கரடி போன்ற விலங்குகளின் வரிசையில் வீராட் கோலி புகைப்படத்தைப் போட்டு ஆஸ்திரேலிய ஊடகம் கருத்துக்கணிப்பு நடத்தி அடாவடியில் ஈடுபட்டுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பெங்களூருவில் நடந்த 2-வது போட்டியின்போது இரு அணி வீரர்களுக்கும் இடையே அதிக அளவு உரசல் எழுந்தது.
உச்ச கட்டமாக டி.ஆர்.எஸ் முறையை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டினார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.
இந்த பிரச்சினை இரு நாடுகளின் கிரிக்கெட் வாரியம் இடையேயான பிரச்சினையாக உருவெடுத்தது. பின்னர் கிரிக்கெட் வாரியங்களுக்கு ஆதரவாக ஊடகங்கள் களம் இறங்கின.
இதனால், ஆஸ்திரேலிய பத்திரிகைகள் இந்திய அணி கேப்டன் விராட் கோலியை மிகவும் தரக்குறைவாக விமர்சித்து எழுதி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னணி விளையாட்டு ஊடகமான ‘பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் ஆஸ்திரேலியா’ தனது வலைதளத்தில் ‘வெட்டல் ஆஃப் தி வீக்’ என்ற பெயரில் அமைந்த கருத்துக்கணிப்பு ஒன்றில் விலங்குகளுடன் விராட் கோலியின் படத்தை வைத்து கேலி செய்துள்ளது.
அதில் பிரசுரிக்கப்பட்ட நான்கு படங்களுள் பூனை, நாய் மற்றும் பாண்டா கரடி ஆகியவற்றுடன் இந்திய அணித் தலைவர் விராட் கோலியின் படமும் இடம் பெற்றது.
நான்கு படங்களும் ஒவ்வொரு முகப்பாவனையுடன் இருப்பது போல அதில் தோற்றம் அளிக்கிறது.
