Commonwealth rifel shoot indian player won gold
காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.
காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நேற்று தொடங்கியது.
இந்தப் போட்டியில், மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற ஹீனா சித்து, மொத்தமாக 626.2 புள்ளிகளை வென்று முதலிடம் பிடித்து தங்கம் வென்று அசத்தினார்.
இது, சர்வதேச போட்டிகளில் ஹீனா வெல்லும் 2-வது தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் தீபக் குமார் வெண்கலப் பதக்கம் வென்றார்.
அதே பிரிவில் இதர இந்தியர்களான ககன் நரங் 4-வது இடத்தியயும் மற்றும் ரவிகுமார் 5-வது இடத்தையும் பிடித்தார்.
