காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், வெண்கல பதக்கத்திற்கான இந்தியா - நியூசிலாந்து இடையேயான மகளிர் ஹாக்கி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இந்திய மகளிர் அணி வெண்கல பதக்கத்தை வென்றது. 

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நடந்துவரும் நிலையில், இன்றுடன் முடிவடைகிறது. இந்திய வீரர்கள், வீராங்கனைகள் காமன்வெல்த்தில் பதக்கங்களை குவித்துவருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதியில் தோற்ற நிலையில், வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்டது. 

இந்திய வீராங்கனை சலிமா இந்தியாவிற்காக முதல் கோலை அடித்தார். அதன்பின்னர் பெனால்டி ஷாட்டில் நியூசிலாந்து ஒரு கோல் அடிக்க, இந்தியாவிற்கு கிடைத்த பெனால்டியில் ஒரு கோல் அடிக்க, 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி வெண்கலம் வென்றது.