cindu in final
புதுடெல்லியில் நடந்து வரும் இந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியின் அரையிறுதியில் கொரிய வீராங்கனை சங் ஜி ஹியுனை வீழ்த்தி இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இந்தியன் ஓபன் சூப்பர்சீரிஸ் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான அரையிறுதிப் போட்டிகள் இன்வு நடைபெற்றன. இதில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்துவும், கொரிய வீராங்கனையும் தரநிலையில் 2-ம் இடத்தில் உள்ள சங் ஜி ஹியுனை எதிர்கொண்டார்.
ஒரு மணிநேரம் 16 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில்
சங் ஜி ஹியுனை 21-18, 14-21, 21-14 என்ற செட்களில் சிந்து தோற்கடித்தார்.

முதல்செட்டை 21-18 என்ற கேம்களில் கைப்பற்றிய சிந்து,2-வது செட்டில் பின்தங்கி 14 புள்ளிகள் மட்டுமே பெற்றநிலையில், சங் ஜி ஹியுன் அதைக் கைப்பற்றினார். வெற்றியாளரை முடிவு செய்யும் 3-வது செட்டில் ஆதிக்கம் செலுத்திய சிந்து, 21-14 செட்களில் கொரிய வீராங்கனையை சாய்த்தார்.
இதன் மூலம், இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டியில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு சிந்து முன்னேறியுள்ளார். நாளை நடக்கும் பைனலில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மிரனை எதிர்கொள்கிறார் சிந்து .
