Asianet News TamilAsianet News Tamil

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் ஆடவர், மகளிர் இறுதிச் சுற்றில் நேருக்கு நேர் மோதும் வீரர்கள் இவர்கள்தான்…

Cincinnati Masters is the men who face the men in the final round ...
Cincinnati Masters is the men who face the men in the final round ...
Author
First Published Aug 21, 2017, 9:35 AM IST


சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆடவர் இறுதிச் சுற்றில் நிக் கிர்ஜியோஸ், மற்றும் கிரிகோர் டிமிட்ரோவ் ஆகியோரும் மகளிர் இறுதிச் சுற்றில் சைமோனா ஹேலப் மற்றும் கார்பைன் முருகுஸா ஆகியோரும் மோதுகின்றனர்.

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ் மற்றும் ஸ்பெயினின் டேவிட் ஃபெரர் மோதினர்.

இதில், 7-6 (3), 7-6 (4) என்ற நேர் செட்களில் டேவிட் ஃபெரரைத் தோற்கடித்தார் நிக் கிர்ஜியோஸ்.

மற்றொரு ஆட்டத்தில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் தனது அரையிறுதியில் அமெரிக்காவின் ஜான் இஸ்னருடன் மோதினார்.

இதில், 7-6 (4), 7-6 (10) என்ற நேர் செட்களில் ஜான் இஸ்னரைத் தோற்கடித்தார் கிரிகோர் டிமிட்ரோவ்.

இறுதிச்சுற்றில் டிமிட்ரோவும், கிர்ஜியோஸும் மோதவுள்ளனர். இவர்கள் இருவரும் இதுவரை ஒரு முறை மட்டுமே நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் டிமிட்ரோவ் வெற்றி கண்டுள்ளார்.

எனினும் தற்போது கிர்ஜியோஸ் உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். அவர் தனது காலிறுதியில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஸ்பெயினின் ரஃபேல் நடாலை தோற்கடித்துள்ளார்.

எனவே இவர்களுக்கு இடையேயான இறுதி ஆட்டம் கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ருமேனியாவின் சைமோனா ஹேலப், அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்ஸை 6-2, 6-1 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னறினார்.

ஹேலப் தனது இறுதிச் சுற்றில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸாவை சந்திக்கிறார்.

முகுருஸா தனது அரையிறுதியில், உலகின் முதல் நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை 6-3, 6-2 என்ற நேர் செட்களில் தோற்கடித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios