Chinese Taipei Grant Free Badminton These indian players got to next rounds

சீன தைபே கிராண்ட ஃப்ரீ பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்களான சிரில் வர்மா, ஹர்ஷீல் தானி, அபிஷேக் எலேகர் ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சீன தைபே கிராண்ட ஃப்ரீ பாட்மிண்டன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்றில் இந்திய வீரர்களான சிரில் வர்மா, ஹர்ஷீல் தானி, அபிஷேக் எலேகர் ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.

இதில் போட்டித் தரவரிசையில் 16-ஆவது இடத்தில் உள்ள சிரில் வர்மா 21-11, 10-21, 21-19 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் வெய் சி லியுவை தோற்கடித்தார்.

இதையடுத்து, சிரில் வர்மா தனது 2-ஆவது சுற்றில் சீன தைபேவின் சியா ஹவ் லீயை சந்திக்கிறார்.

இந்தியாவின் அபிஷேக், மலேசியாவின் யு மிங் ஆடம் லாவை 20-22, 21-14, 21-10 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

கொரியாவின் சியூங் ஹூன் வூவை தனது 2-ஆவது சுற்றில் அபிஷேக் சந்திக்கிறார்.

போட்டித் தரவரிசையில் 14-ஆவது இடத்தில் இருக்கும் ஹர்ஷீல் 21-12, 21-14 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் லீ சாக் வேயை வீழ்த்தினார்.

ஹர்ஷீத் தானி தனது அடுத்த சுற்றில் தென் கொரியாவின் ஹா யங் வூங்கை எதிர்கொள்கிறார்.

இதனிடையே, ஆடவர் ஒற்றையர் பிரிவின் இதர முதல் சுற்றுகளில் போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருந்த செளரவ் வர்மா, ராகுல் யாதவ் சிட்டபோய்னா, கார்த்திகே குல்ஷன் குமார், ஹேமந்த் கெளடா, சித்தார்த் தாகுர் ஆகியோர் தோல்வியடைந்தனர்.