Chinese Taipei Grand Free Indian players got into the next round
சீன தைபே கிராண்ட் ஃப்ரீ பாட்மிண்டன் போட்டியில் இந்தியர்களான சிரில் வர்மா, ஸ்ரீ கிருஷ்ண பிரியா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி அசத்தினர்.
சீன தைபே கிராண்ட் ஃப்ரீ பாட்மிண்டன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில், சீன தைபேவின் சியா ஹாவ் லீயை எதிர்கொண்டார் சிரில் வர்மா.
இந்த ஆட்டத்தின் முடிவில் சிரில் வர்மா 16-21, 21-17, 21-17 என்ற செட் கணக்கில் சியா ஹாவ் லீயை வென்றார்.
அவர் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மலேசியாவின் லீ ஸீ ஜியாவை சந்திக்கவுள்ளார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீ கிருஷ்ண பிரியா தனது இரண்டாவது சுற்றில் சியாங் மேய் ஹூயை எதிர்கொண்டார். அதில், 21-17, 20-22, 21-9 என்ற செட் கணக்கில் சியாங் மேய் ஹூயை வீழ்த்தினார் ஸ்ரீ கிருஷ்ண பிரியா.
ஸ்ரீ கிருஷ்ண பிரியா தனது அடுத்த சுற்றில் சீன தைபேவின் ஷுவோ யன் சங் உடன் மோதவுள்ளார்.
