Chinese Open Badminton Inside sIndu Saina pranay out ...
சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஆனால், சாய்னா நெவால், ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோர் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.
சீன ஓபன் பாட்மிண்டன் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நடப்புச் சாம்பியனான சிந்து தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சீன வீராங்கனையான ஹான் யூவை எதிர்கொண்டார்.
இருவருக்கும் இடையே விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் சிந்து 21-15, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்றார்.
சிந்து தனது காலிறுதியில் சீனாவின் தகுதிச் சுற்று வீராங்கனையான காவ் ஃபாங்ஜியை சந்திக்கிறார்.
மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் ஜப்பானின் அகானே யமாகுசியை எதிர்கொண்ட சாய்னா, அதில் 18-21, 11-21 என்ற செட் கணக்கில் தோல்வி கண்டார்.
அதேபோன்று, ஆடவர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் உலகின் 11-ஆம் நிலை வீரருமான பிரணாய், உலகின் 53-ஆம் நிலை வீரரான ஹாங்காங்கின் செயுக் யியுவை எதிர்கொண்டு 19-21, 17-21 என்ற செட் கணக்கில் வீழ்ந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
