China Open Rafael Nadal advanced to next round

சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷிய வீரரை வீழ்த்தி ஸ்பெயினின் ரஃபேல் நடால் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தினர்.

சீன ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் உலகின் முதல் நிலை வீரர் ஸ்பெயினின் ரஃபேல் நடாலும், ரஷியாவின் காரென் காச்சனோவும் மோதினர்.

இந்த ஆட்டத்தின் முடிவில் நடால் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிப் பெற்றார்.

நடால் தனது காலிறுதியில் அமெரிக்காவின் ஜான் இஸ்னரை சந்திக்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸவரேவ், இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினியுடன் மோதினார்.

இதில், 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ஜான் இஸ்னரை வெற்றிப் பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

அடுத்த சுற்றில் ஜான் இஸ்னர் ரஷியாவின் ஆன்ட்ரே ருபலேவை சந்திக்கிறார்.

அதேபோன்று மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் 3-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 6-2, 7-5 என்ற செட் கணக்கில் ரஷியாவின் எலினா வெஸ்னினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

அடுத்த சுற்றில் பிரான்சின் கரோலின் கார்ஸியாவை எதிர்கொள்கிறார் எலினா ஸ்விடோலினா.

போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்த டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியை 6-1, 6-4 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா வீழ்த்தினார்,

அவர் தனது காலிறுதியில் சகநாட்டவரான பார்போரா ஸ்டிரைக்கோவாவை எதிர்கொள்கிறார்.