Asianet News TamilAsianet News Tamil

செஸ் ஒலிம்பியாட்: இந்திய அணிகளின் 6வது சுற்று போட்டி முடிவுகள்..!

செஸ் ஒலிம்பியாட் இந்திய அணிகள் ஆடிய 6வது சுற்று போட்டிகளின் முடிவுகளை பார்ப்போம்.
 

chess olympiad indian teams 6th round results
Author
Mamallapuram, First Published Aug 3, 2022, 8:41 PM IST

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்துவருகிறது. செஸ் ஒலிம்பியாடில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் 6 அணிகளாக பிரிந்து ஆடுகின்றனர்.

இன்று ஆகஸ்ட் 3ம் தேதி 6வது சுற்றில் இந்திய அணிகள் ஆடிய போட்டிகளின் முடிவுகளை பார்ப்போம்.

இதையும் படிங்க - தினேஷ் கார்த்திக்லாம் ஃபினிஷரே இல்ல.. ஸ்ரீகாந்த் செம விளாசல்..!

ஓபன் பிரிவில் ரொமானியாவை எதிர்கொண்டு ஆடிய இந்தியா ஏ அணி 2.5-1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா பி அணி ஸ்பெய்னை 2.5-1.5 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

சிலி நாட்டு அணியை எதிர்கொண்டு ஆடிய இந்தியா சி அணி வீரர்களும் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற, சிலி அணியை வீழ்த்தி சி அணியும் வெற்றி பெற்றது. இந்தியா ஆடவர் 3 அணிகளும் 6வது சுற்றில் வெற்றி பெற்றன. இந்தியா பி அணியில் ஆடிவரும் தமிழகத்தை சேர்ந்த குகேஷ், இதுவரை ஆடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க - WI vs IND: அடிச்சது ஒரே சிக்ஸர்.. ஆனால் அதிலும் ஒரு சாதனை படைத்த ரோஹித் சர்மா..! கோலியின் சாதனை காலி

இந்திய மகளிர் அணிகளில் ஏ அணி மட்டுமே 6வது சுற்றில் வெற்றி பெற்றது. ஃப்ரான்ஸை எதிர்கொண்டு ஆடிய ஏ அணி ஃப்ரான்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்தியா பி அணி ஜார்ஜியாவிடம் தோல்வியை தழுவியது. பிரேசிலை எதிர்கொண்ட இந்தியா மகளிர் சி அணி, போட்டியை டிரா செய்தது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios