செஸ் ஒலிம்பியாட் தொடரில் முதல் சுற்றில் ஆடிய இந்திய அணிகள் ஆடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையில், இன்று நடக்கும் 2வது சுற்றில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் ஆடும் போட்டிகளின் விவரங்களை பார்ப்போம். 

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. நேற்று (ஜூலை 29) இந்திய ஆடவர் ஏ, பி, சி மற்றும் இந்திய மகளிர் ஏ, பி, சி ஆகிய அணிகள் விளையாடின.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நேற்று ஆடிய அனைத்து போட்டிகளிலும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் வெற்றி பெற்ற நிலையில், இன்று அவர்கள் எதிர்கொள்ளும் 2வது சுற்று அணிகள் குறித்த விவரங்களை பார்ப்போம். இன்றைய போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா ஆடவர் பி அணியில் இடம்பெற்று எஸ்டானியா வீரரை எதிர்கொள்கிறார்.

இந்தியா ஆடவர் ஏ அணி vs மால்டோவா

1. ஹரிகிருஷ்ணா பெண்டாலா - சிட்கோ இவான்
2. அர்ஜுன் எரிகைசி - மகோவை ஆண்ட்ரை
3. நாராயணன் எஸ்.எல் - ஹமிடெவிசி விளாமிடிர்
4. சசிகிரன் கிருஷ்ணன் - பல்டாக் லுலியன்

Scroll to load tweet…

இந்தியா ஆடவர் பி அணி vs எஸ்டானியா

1. குகேஷ் - கிக் கலே
2. பிரக்ஞானந்தா - சுகாவின் கிரில்
3. அதிபன் - வாலாடின் அலெக்ஸாண்டர்
4. ரோனக் சத்வானி - ஷிஷ்கோவ் ஆண்ட்ரை

Scroll to load tweet…

இந்தியா ஆடவர் சி அணி vs மெக்சிகோ

1. சூர்யா சேகர் கங்குலி - ஹெர்னாண்டஸ்
2. சேதுராமன் - லூயிஸ் ஃபெர்னாண்டோ
3. அபிஜித் குப்தா - டயாஸ் ரோஸஸ் ஜூலியோ செசர்
4. கார்த்திகேயன் முரளி - காபோ விடால்

Scroll to load tweet…

இந்தியா மகளிர் ஏ அணி vs அர்ஜெண்டினா

1. கோனெரு ஹம்பி - ஜுரியல் மரிஸா
2. வைஷாலி - மரியா ஜோஸ்
3. டானியா சச்தேவ் - பார்டா ரோடாஸ்
4. பக்தி குல்கர்னி - மரியா பெலென்

இந்தியா மகளிர் பி அணி vs லட்வியா

1. வந்திகா அகர்வால் - ரோகுலே லாரா
2. பத்மினி ரூட் - பெர்ஸினா
3. சௌமியா சுவாமிநாதன் - அக்னெஸா ஸ்டெபானியா
4. மேரி அன் கம்ஸ் - மக்லகோவா

இந்தியா மகளிர் சி அணி vs சிங்கப்பூர்

1. ஈஷா கர்வடே - கெகேய் அஞ்செலா
2. நந்திதா பி.வி - என் இம்மானுவேல் 
3. பிரத்யுஷா - லியூ யாங் ஹாஸெல்
4. விஷ்வா வஸ்னவாலா - ஃபாங் குன்