Asianet News TamilAsianet News Tamil

செஸ் ஒலிம்பியாட்டை தொடர்ந்து சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்.. தயார் நிலையில் 5 ஆடுகளங்கள்.

செஸ் ஒலிம்பியாட்டிற்கு  அடுத்தப்படியாக சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டிகள் இன்று தொடங்குகிறது. சர்வதேச தரத்தில் 5 ஆடுகளங்கள் தயார் நிலையில் உள்ளன. 

Chennai Open Womens Tennis Tournament starts today
Author
First Published Sep 12, 2022, 8:53 AM IST

செஸ் ஒலிம்பியாட்டிற்கு  அடுத்தப்படியாக சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டிகள் இன்று தொடங்குகிறது. சர்வதேச தரத்தில் 5 ஆடுகளங்கள் தயார் நிலையில் உள்ளன. 

சென்னையை இந்தியாவின் விளையாட்டு மையமாக உருவாக்க தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டுவருகிறது. அந்தவகையில் தான், இந்தியாவில் செஸ் ஒலிம்பியாடை நடத்த கிடைத்த வாய்ப்பை, சென்னையில் நடத்த அனுமதி பெற்று, சர்வதேசமே திரும்பி பார்க்கும் அளவிற்கு மிக பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் செஸ் ஒலிம்பியாடை நடத்தி முடித்தது தமிழ்நாடு அரசு.

சென்னையில் நடத்தப்பட்ட செஸ் ஒலிம்பியாடை கண்டு உலகளவிலிருந்து வந்திருந்த வீரர், வீராங்கனைகள் எல்லாம் பிரமித்துவிட்டனர். செஸ் ஒலிம்பியாடில் ஆடவந்த சர்வதேச வீரர், வீராங்கனைகளை தமிழ்நாடு அரசு தங்கவைத்து, உபசரித்த விதமும், செஸ் ஒலிம்பியாடை நடத்த செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளும் சர்வதேசத்தையே சென்னையை திரும்பி பார்க்கவைத்தது.

இந்நிலையில், அடுத்ததாக அதேபோன்றதொரு சென்னையில் முதல் முறையாக சர்வதேச தொடர் போட்டி நடக்கவுள்ளது. மகளிர் டென்னிஸ் சென்னை ஓபன் தொடர் வரும் 12 முதல் 18 வரை சென்னையில் நடக்கிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நடக்கிறது. இதற்காக சர்வதேச தரத்தில் 5 ஆடுகளங்கள் தயார் நிலையில் உள்ளன.  

இந்த டென்னிஸ் திருவிழாவில் உலக தரவரிசையில் 29-வது இடம் வகிக்கும் அமெரிக்க வீராங்கனை அலிசன் ரிஸ்கே, 72-ம் நிலை வீராங்கனை வர்வரா கிராசெவா (ரஷியா), மேக்டா லினெட் (போலந்து), 2014-ம் ஆண்டு விம்பிள்டனில் இறுதிப்போட்டி வரை முன்னேறியவரான யூஜெனி புசார்ட் (கனடா), தாட்ஜனா மரியா (ஜெர்மனி), யானினா விக்மேயர் (பெல்ஜியம்), குவாங் வாங்க் (சீனா), ரெபக்கா பீட்டர்சன் (சுவீடன்), இந்தியாவின் அங்கிதா ரெய்னா, கர்மன் தண்டி உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.2 கோடியாகும். இதில் ஒற்றையர் பிரிவில் மகுடம் சூடும் வீராங்கனைக்கு ரூ.25 லட்சமும், இரட்டையர் பிரிவில் வெற்றி பெறும் ஜோடிக்கு ரூ.9 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios