Asianet News TamilAsianet News Tamil

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் யூகி...

Chennai Open Challenger Tennis Yugi advanced to semis ...
Chennai Open Challenger Tennis Yugi advanced to semis ...
Author
First Published Feb 16, 2018, 11:14 AM IST


சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் உலகின் 111-ஆம் நிலையில் இருக்கும் பாம்ப்ரி தனது காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் இருந்த ஜப்பானின் யசுடகா உசியாமாவுடன் மோதினார்.

இதில், 5-7, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார்.  பாம்ப்ரி தனது அரையிறுதியில் தென் கொரியாவின் டக்ஹீ லீயை எதிர்கொள்கிறார்.

டக்ஹீ லீ தனது காலிறுதியில் 6-2, 3-6, 6-3 என்ற செட்களில் பிரான்ஸின் அன்டோனி எஸ்கோஃபியரை வீழ்த்தினார்.

மற்றொரு காலிறுதியில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சன் 6-4, 3-0 என்ற கணக்கில் செர்பியாவின் டானிலோ பெட்ரோவிச்சை வென்றார். அவர் தனது அரையிறுதியில் ஸ்பெயினின் பெட்ரோ மார்டினெஸை சந்திக்கிறார்.

முன்னதாக மார்டினெஸ் தனது காலிறுதியில் 7-5, 6-2 என்ற செட்களில் போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருந்த எகிப்தின் முகமது சஃப்வாட்டை வென்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios