Asianet News TamilAsianet News Tamil

முதல் ஓவரிலேயே விக்கெட்.. ரோஸ்டன் சேஸ் அபார சதம்!! உமேஷின் வேகத்தில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 
 

chase hits century in second test match against india
Author
Hyderabad, First Published Oct 13, 2018, 9:58 AM IST

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 


இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நேற்று தொடங்கியது.  டாஸ் வென்று இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்திருந்தது. 

92 ரன்களுக்கே பிராத்வைட், பவல், ஹோப், ஹெட்மயர் ஆகியோரின் விக்கெட்டுகளை வெஸ்ட் இண்டீஸ் அணி இழந்தது. ஆம்பிரிஷ் 18 ரன்களிலும் டவ்ரிச் 30 ரன்களிலும் ஆட்டமிழக்க 182 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது வெஸ்ட் இண்டீஸ். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் சேஸ் பொறுப்பாக ஆடி அரைசதம் கடந்தார். 6 விக்கெட்டுக்கு பிறகு சேஸுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹோல்டர் அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார். சேஸும் ஹோல்டரும் பொறுப்பாக ஆடி விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் ரன்களை சேர்த்தனர். 

chase hits century in second test match against india

சிறப்பாக ஆடிய ஹோல்டரும் அரைசதம் கடந்தார். நேற்றைய ஆட்டம் முடிய 20 நிமிடங்கள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், கவனமாக ஆடி முதல்நாள் ஆட்டத்தை முடிக்காமல் உமேஷ் யாதவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார் ஹோல்டர். சேஸ்-ஹோல்டர் ஜோடி 7வது விக்கெட்டுக்கு 104 ரன்களை சேர்த்தது. இதையடுத்து சேஸுடன் பிஷூ ஜோடி சேர்ந்து முதல் நாள் ஆட்டத்தை முடித்தனர். 

சேஸ் 98 ரன்களுடன் களத்தில் இருந்தார். 7 விக்கெட் இழப்பிற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி 295 ரன்கள் எடுத்த நிலையில் நேற்றைய முதல் நாள் ஆட்டம் முடிந்தது. 

இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியதும், சேஸும் பிஷூவும் களமிறங்கினார். இன்றைய ஆட்டம் தொடங்கியதும் முதல் ஓவரிலேயே பிஷூவை போல்டாக்கி அனுப்பினார் உமேஷ். ரோஸ்டன் சேஸ் சதத்தை பூர்த்தி செய்தார். 

சதமடித்த சேஸ் 106 ரன்களில் உமேஷ் யாதவின் பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார். கடைசி விக்கெட்டான கேப்ரியலையும் உமேஷ் வீழ்த்தினார். இதையடுத்து 311 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios