Champions Trophy Who is enter into semifinals Sri Lanka or Pakistan

சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில் இலங்கையும், பாகிஸ்தானும் கார்டிஃப்பில் இன்று மோதுகின்றன. வெற்ரிப் பெற்று எந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்றாலும், அடுத்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அசத்தியது.

அதேநேரத்தில் இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றபோதிலும், இந்தியாவுக்கு எதிராக 322 ஓட்டங்கள் என்ற இலக்கை எட்டி வெற்றிப் பெற்று அசத்தியது.

பாகிஸ்தான் அணி பலம் வாய்ந்த பந்துவீச்சாளர்களைக் கொண்டுள்ளது.

இலங்கை அணியில் வலுசேர்க்க இளம் பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர்.

சாம்பியன்ஸ் டிராபியில் இவ்விரு அணிகளும் இதுவரை மூன்று ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இலங்கை இரு வெற்றிகளையும், பாகிஸ்தான் ஒரு வெற்றியையும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.