Champions Trophy Pakistans gives failure to shock South Africa

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணிக்கு அதிர்ச்சித் தோல்வி கொடுத்து டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது பாகிஸ்தான்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி தொடரில் பர்மிங்காமில் பகல், இரவு ஆட்டமாக நடந்த 7–வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

‘டாஸ்’ வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்க அணி, பாகிஸ்தான் வீரர்களின் நேர்த்தியான பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கை சமாளித்து ஓட்டங்கள் எடுக்க முடியாமல் இருந்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்புக்கு 219 ஓட்டங்கள் எடுத்தது.

அதிகபட்சமாக டேவிட் மில்லர் 75 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

பாகிஸ்தான் அணி தரப்பில் ஹசன் அலி 3 விக்கெட்டும், ஜூனைட்கான், இமாத் வாசிம் தலா 2 விக்கெட்டும், முகமது ஹபீஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர், 218 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பஹார் ஜமான் 31 ஓட்டங்க:ளிலும் அசார் அலி 9 ஓட்டங்கலிலும், முகமது ஹபீஸ் 26 ஓட்டங்கலிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

மூன்று விக்கெட்டையும் மோர்னே மோர்கல் வீழ்த்தினார்.

பாகிஸ்தான் அணி 27 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 119 ஓட்டங்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டது. அப்போது பாபர் அசாம் 31 ஓட்டங்களுடனும், சோயிப் மாலிக் 16 ஓட்டங்களுடனும் களத்தில் நின்றனர்.

ஆட்டத்தைத் தொடர முடியாத அளவுக்கு மழை பலமாக பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் விதிமுறை பின்பற்றப்பட்டது.

27 ஓவர்களில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 101 ஓட்டங்களே போதுமானது. எனவே அந்த அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பாகிஸ்தான் அணி வீரர் ஹசன் அலி ஆட்டநாயகன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இப்[போட்டி தொடரில் பாகிஸ்தான் அணி முதல் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பில் இருந்து வெளியேறாமல் தப்பியது. அந்த அணி முதல் லீக் ஆட்டத்தில் இந்தியாவிடம் தோல்வி கண்டு இருந்தது.

ஒருநாள் போட்டி தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் தென்ஆப்பிரிக்க அணி சந்தித்த அதிர்ச்சி தோல்வி இதுவாகும். அந்த அணி முதல் லீக் ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி இருந்தது.