Champions Trophy Cricket Today India and Sri Lanka are confrontational ...

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இன்று இலங்கையுடன் மோதுகிறது இந்திய அணி.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிப் பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறும்.
நடப்புச் சாம்பியனான இந்தியா, தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதால் உரிய உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் களம் இறங்கவுள்ளனர்.

அதேவேளையில் இலங்கை அணியானது, தனது முந்தைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டுள்ளது. ஆகவே, இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டு அந்தத் தோல்வியிலிருந்து மீள வேண்டிய முனைப்புடன் இலங்கை அணியினர் உள்ளனர்.

இரு அணிகளைப் பொருத்த வரையில், இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலத்துடன் காணப்படுகிறது. பாகிஸ்தானுடனான ஆட்டத்தில் ரோஹித் சர்மா, தவன், கோலி, யுவராஜ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

பந்துவீச்சில், இந்திய அணியின் புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், சமி, அஸ்வின் ஆகியோர் இலங்கை பேட்ஸ்மேன்களை திணறடிக்க உள்ளனர்.

இலங்கை அணியைப் பொருத்த வரையில், உபுல் தரங்காவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை அந்த அணிக்கான பின்னடைவாக உள்ளது. எனினும், காயத்திலிருந்து மீண்டுள்ள அந்த அணியின் கேப்டன் மேத்தியூஸ் இந்திய அணிக்கு எதிராக களம் காண்கிறார்.

தடுமாறி வரும் தினேஷ் சண்டிமல், கபுகெடரா ஆகியோர் ஃபார்முக்கு திரும்பும் பட்சத்தில் அணிக்கு பலம் சேர்ப்பதாக இருக்கும்.

இலங்கை தரப்பில் மேத்யூஸ் பந்துவீசாத நிலையில், மலிங்கா சிறப்பாக செயல்படாத பட்சத்தில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்.

இந்திய அணிகள் விவரம்

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், ரோஹித் சர்மா, யுவராஜ் சிங், தோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹார்திக் பாண்டியா ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், முகமது சமி, அஸ்வின், ரஹானே, தினேஷ் கார்த்திக்

இலங்கை அணி விவரம்:

ஏஞ்ஜெலோ மேத்யூஸ் (கேப்டன்), தினேஷ் சண்டிமல், நிரோஷன் திக்வெல்லா, சமரா கபுகெடரா, குசல் மெண்டிஸ், குசல் பெரரா, திசர பெரரா, சீகுகே பிரசன்னா, நுவன் பிரதீப், சுரங்கா லக்மல், லக்ஷன் சன்டகன், மலிங்கா, குணரத்னே, நுவன் குலசேகரா