champion cricket league

இங்கிலாந்தில் ஜுன் மாதம் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் காயத்தால் அவதிப்பட்டு வந்த ரோகித் சர்மா, முகமது ஷமி ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

4ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந்தேதி தொடங்குகிறது.ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் முதல் 8 இடங்களில் இருக்கும் அணிகள் இந்த போட்டியில் கலந்து கொள்கின்றன.

ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன. மேற்கிந்தியத்தீவுகள் அணி 9-து இடத்தில் இருப்பதால், அந்தஅணி தகுதியிழந்தது.

இதில் ஜூன் 4-ந்தேதி நடக்கும் போட்டியில், நடப்புசாம்பியன் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானையும், 8-ந்தேதி நடக்கும் 2-வது ஆட்டத்தில் இலங்கையையும், 11-ந்தேதி 3-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவையும் எதிர்கொள்கிறது.

இந்நிலையில், வருவாய் பகிர்வு பிரச்சினையில் இந்திய அணி பங்கேற்காது என பி.சி.சி.ஐ. தெரிவித்தநிலையில், தனதுமுடிவை மாற்றி பங்கேற்போம் என நேற்று அறிவித்தது. அதன்படி, டெல்லியில் உள்ள பி.சி.சி.ஐ. அலுவலகத்தில் இன்று வீரர்கள் தேர்வு நடந்தது. தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், பயிற்சியாளர் அணில் கும்ப்ளே, கேப்டன் விராத் கோலி ஆகியோர் அணித் தேர்வுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தின் முடிவில் தேர்வுக்குழுவின் தலைவர் எம்.எஸ்.கே.பிரசார் நிருபர்களிடம் கூறுகையில், “ இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடக்கும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் காயம் காரணமாக அணியில் இடம் பெறாமல் இருந்த ரோகித் சர்மா, வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி ஆகியோர் அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதத்துக்கு பின் ரோகித்சர்மா சர்வதேச போட்டிகளில் விளையாடமல் இப்போது விளையாட உள்ளார். முகமது ஷமி 2015ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் அரையிறுதிக்குப்பின் சர்வதேச போட்டிகளில்விளையாடவில்லை.

சாம்பியன்ஸ் போட்டியில், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்குமார், உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்டயோ ஆகிய 4 வேகப்பந்துவீச்சாளர்களோடு சேர்த்து, முகமது ஷமியும் பங்கேற்பார். அவர் மீது தேர்வாளர்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்.

அதேசமயம், தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், ரிஷ்பா பந்த், சுரேஷ் ரெய்னா, சர்துல் தாக்கூர் ஆகிய வீரர்கள் குறித்தும் தீவிரமாக ஆலோசித்தோம். அவர்கள் அனைவரும், ஐ.பி.எல். போட்டி முடிந்ததும், தேசிய பயிற்சி அகாடெமியில் இணைவர்கள். இவர்கள் காத்திருப்பு வீரர்களாக வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

இந்திய அணி விவரம்:

விராத் கோலி(கேப்டன்), தோனி(விக்கெட் கீப்பர்),ஆர் அஸ்வின், சிகார் தவான், ஜஸ்பிரித் பும்ரா, ரவிந்திர ஜடேஜா, கேதார் ஜாதவ், புவனேஷ்வர் குமார், அமித் மிஸ்ரா, மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, அஜின்கயா ரகானே, உமேஷ் யாதவ், யுவராஜ் சிங், முமகமது ஷமி.


கடந்த 2013ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஐ.சி.சி. சாம்பியன்ஸ் போட்டியில் தோனி தலைமையிலான இந்திய கோப்பையை வென்றது. இந்த முறை மீண்டம் சாம்பியன் பட்டத்தை தக்கவைக்குமானஎன்பது பொறுத்திருந்து பார்க்கலாம்.