Captain not like me so Out Im Going Out - Anil Kumble

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் வீராட் கோலிக்கு என்னை பிடிக்காததால், அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினேன் என்று அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே ராஜிநாமா செய்துள்ளார். அனில் கும்ப்ளேவும் தனது ராஜிநாமா அறிக்கையில், “கோலியுடனான கருத்து வேறுபாடுகளால் பதவியை ராஜிநாமா செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதனை பிசிசிஐ தனது அறிக்கையின் மூலம் உறுதி செய்துள்ளது. இதன் விளைவாக கும்ப்ளேவின் பதவி விலகலையடுத்து சமூக வலைத்தளத்தில் கும்ப்ளேவுக்கு ஆதரவாகவும், கோலிக்கு எதிராகவும் கருத்துகள் பதியப்பட்டு வருகின்றன

இந்த நிலையில் கும்ப்ளேவின் ராஜிநாமா குறித்த பிசிசிஐ-யின் அறிவிப்பு:

“மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் அணில் கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளராக நீடிக்க கிரிக்கெட் ஆலோசனைக் குழு அனுமதி அளித்தது. ஆனால், அதனை ஏற்க மறுத்து கும்ப்ளே ராஜிநாமா செய்துள்ளார்.

இந்திய அணிக்கான அடுத்த தலைமைப் பயிற்சியாளரை நியமிக்கும் விவகாரத்தில் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவுடன் ஆலோசித்து பிசிசிஐ செயல்படும்.

இந்த இடைப்பட்டக் காலத்தில் மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் பங்கேற்கச் சென்றுள்ள இந்திய அணியின் கண்காணிப்பாளராக கிரிக்கெட் நடவடிக்கைகள் மேலாளர் எம்.வி.ஸ்ரீதர் நியமிக்கப்படுகிறார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.