captain kohli praised vijay shankar

அந்நிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் வெல்ல விஜய் சங்கரைப் போன்ற ஒரு ஆல்ரவுண்டர் கண்டிப்பாக தேவை என கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. திருமணம் காரணமாக புவனேஷ்குமார், இலங்கைக்கு எதிரான எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இதையடுத்து அவருக்குப் பதிலாக ஆல்ரவுண்டரான தமிழக வீரர் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கோலி, இந்திய அணிக்கு முதல் ஆல்ரவுண்டர் தேர்வாக ஹர்திக் பாண்டியா உள்ளார். அவருக்கு துணையாக விஜய் சங்கர் இருப்பார். அந்நிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற ஆல்ரவுண்டர்களின் பங்களிப்பு அவசியம்.

அந்த வகையில், ஹர்திக் பாண்டியாவிற்கு மாற்று அவசியம் என்பதால்தான் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பேட்டிங், பவுலிங் இரண்டிலுமே அசத்தியுள்ள விஜய் சங்கர், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வார் என நம்புவதாக கோலி தெரிவித்தார்.