captain kohli award in another talent
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடியா 3 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி 100 ஓடியே எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை புரிந்துள்ளார்.
6 ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் 3 டி- 20 போட்டியிலும் விளையாட இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்கா சென்றுள்ளது. முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி அசத்தல் வெற்றியை பெற்றது.

இதையடுத்து மூன்றாவது ஒருநாள் போட்டி கேப்டவுனில் நேற்று நடைபெற்றது. இதில் ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதனால் முதலில் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா ‘டக் அவுட்’ ஆனார். அடுத்துவந்த கேப்டன் கோலியும் ரபாடா வேகத்தில் எல்.பி.டபிள்யூ., முறையில் அவுட் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் கோலி அம்பயர் முடிவை ரிவியூ செய்தார். அதில் பந்து பேட்டில் பட்டது தெளிவாக தெரிந்ததால் அம்பயரின் முடிவு மாற்றப்பட்டு கோலி நாட் அவுட் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய கோலி, ஒருநாள் அரங்கில் தனது 34வது சதத்தை பூர்த்தி செய்தார்.
இதையடுத்து ஒட்டுமொத்த சர்வதேச அரங்கில் தனது 55வது சதத்தை பூர்த்தி செய்த கோலி, அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் சச்சின் , பாண்டிங் , சங்ககரா , காலிஸ் ஆகியோரை தொடர்ந்து 5வது இடத்துக்கு முன்னேறினார்.
தொடர்ந்து இறுதிவரை விளையாடி 160 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் குவித்தது. 304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களத்தில் இறங்கியது.

இறுதியில் தென் ஆப்ரிக்க அணி, 40 ஓவரில் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.
159 பந்துகளை எதிர்கொண்டு 160 ரன்கள் எடுத்தார். இதில் 12 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும். கோலி ஒருநாள் போட்டிகளில் அடிக்கும் 34 சதமாகும்.
அவரது ரன் பவுண்டரி மற்றும் சிக்சர் மூலம் 60 ரன்கள் எடுத்தார். மற்ற 100 ரன்களையும் அவர் அனைத்தையும் ஓடிதான் எடுத்தார். ஒரு ரன்களாக 75 முறையும், 2 ரன்களாக 11 தடவையும், 3 ரன்களாக ஒரு தடவையும் எடுத்தார். 100 ரன்களை ஓடி எடுத்த முதல் இந்திய வீரர் கோலி என்ற சாதனையை பெற்றுள்ளார்.
