buttler consecutive five fifties in ipl

ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை சேவாக்குடன் ராஜஸ்தான் வீரர் பட்லர் பகிர்ந்துகொள்கிறார்.

நடந்துவரும் ஐபிஎல் 11வது சீசனில் ராஜஸ்தான் அணிக்காக ஆடிவரும் ஜோஸ் பட்லர், முதல் 7ஆட்டங்களில் நடு வரிசையில் இறக்கப்பட்டார். நடுவரிசையில் சோபிக்காத பட்லர், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார். அந்த போட்டியில் 67 ரன்கள் குவித்தார். அதன்பிறகு பஞ்சாப்புடன் நடந்த அடுத்தடுத்த இரண்டு போட்டிகளிலும் அரைசதம் அடித்து மிரட்டினார்.

அதன்பிறகு சென்னைக்கு எதிரான போட்டியில் 95 நாட் அவுட், மும்பைக்கு எதிரான போட்டியில் 94 நாட் அவுட் என எதிரணிகளை பட்லர் மிரட்டிவருகிறார். மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கும் பட்லர், தொடர்ச்சியாக 5 அரைசதங்களை அடித்து எதிரணிகளை மிரட்சியடைய செய்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக ஐந்து அரைசதங்களை இதற்கு முன்னதாக சேவாக் மட்டும்தான் அடித்துள்ளார். தற்போது சேவாக்குடன் பட்லரும் இணைந்துள்ளார்.