But that is out of international cricket Pakistan Test captain Misbah notification



சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுகிறேன். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரே நான் விளையாட போகும் கடைசி சர்வதேச கிரிக்கெட் தொடர் என்று பாகிஸ்தான் டெஸ்ட் கேப்டன் மிஸ்பா உல் ஹக் அறிவித்துள்ளார்.

42 வயதான, மிஸ்பா உல் ஹக், 2010 முதலே பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். மிஸ்பா தலைமையில்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது. இது அவருடைய மிகப் பெரிய சாதனையாகும்.

பாகிஸ்தான் டெஸ்ட் கேப்டன் மிஸ்பா உல் ஹக் செய்தியாளர்களுக்கு நேற்றுத் தெரிவித்தது:

“சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுகிறேன். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரே நான் விளையாட போகும் கடைசி சர்வதேச கிரிக்கெட் தொடர். அதேசமயத்தில் உள்ளூர் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன். உள்ளூர் கிரிக்கெட்டிலிருந்து எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை பின்னர் முடிவு செய்வேன்' என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 21-ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.