Asianet News TamilAsianet News Tamil

ஆஸ்திரேலிய கேப்டன் அதிர்ச்சியிலிருந்து மீளவே கொஞ்ச நேரம் ஆயிடுச்சு!! எல்லாம் பும்ராவின் மாயாஜாலம் தான்.. வீடியோவை பாருங்க

பெர்த் டெஸ்டில் பும்ரா வீசிய அபாரமான பந்து ஒன்று, ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 
 

bumrahs extraordinary delivery make shocking australian skipper tim paine
Author
Australia, First Published Dec 15, 2018, 2:03 PM IST

பெர்த் டெஸ்டில் பும்ரா வீசிய அபாரமான பந்து ஒன்று, ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 326 ரன்களை எடுத்தது. இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை ஆடிவருகிறது. 

ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 4 விக்கெட்டுகளையும் பும்ரா, உமேஷ் மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

bumrahs extraordinary delivery make shocking australian skipper tim paine

இதில் ஃபின்ச் மற்றும் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் ஆகிய 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் பும்ரா. டிம் பெய்னிற்கு பும்ரா வீசிய பந்து ஒன்று அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. டிம் பெய்ன் 7 ரன்களுடன் களத்தில் இருந்தபோது 84வது ஒவரை பும்ரா வீசினார். அந்த ஓவரின் 4வது பந்தை ஃபுல் லெந்த்தாக வீசினார். அருமையான அந்த ஃபுல் லெந்த் டெலிவரியை பெய்னால் தொடக்கூட முடியவில்லை. அந்த பந்து விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டின் தலைக்கு மேலாக சென்று பவுண்டரிக்கு ஓடியது. அந்த பந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார் டிம் பெய்ன்.

Follow Us:
Download App:
  • android
  • ios