திமிரு பண்ண பொல்லார்டு.. மண்டை சூடான பும்ரா!! வீடியோ

https://static.asianetnews.com/images/authors/a3d865ff-350d-54f1-ae0b-e6327862a3a9.jpg
First Published 8, Nov 2018, 10:16 AM IST
bumrah got angry on pollard during second t20
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பொல்லார்டு மீது பும்ரா கடுப்பான சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பொல்லார்டு மீது பும்ரா கடுப்பான சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் இந்திய அணி தொடரை வென்றுவிட்டது. கடந்த 6ம் தேதி தீபாவளியன்று நடந்த இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அந்த போட்டியில் 196 ரன்கள் என்ற இலக்கை வெஸ்ட் இண்டீஸ் அணி விரட்டியது. அப்போது வெஸ்ட் இண்டீஸின் இன்னிங்ஸின் போது பும்ரா வீசிய 11வது ஓவரில் பொல்லார்டு அடித்த பந்து நேராக மேலேற அந்த கேட்ச்சை பும்ராவே பிடித்தார். அப்போது பும்ரா கேட்ச் பிடிக்கும்போது, அவரை தொந்தரவு செய்யும் விதமாக அவருக்கு நேராக நடந்துசென்று பொல்லார்டு இடித்தார். ஆனால் பும்ரா கேட்ச்சை பிடித்துவிட்டார். 

தெரியாமல் நடந்துசென்றதாக காட்டும் விதமாக கையை தூக்கி மன்னிப்பு கேட்கும் விதமாக பொல்லார்டு செய்கை காட்டினார். எனினும் அவர் வேண்டுமென்றே குறுக்கே வந்ததாக நினைத்த பும்ரா கடுப்பானார். இதனால் சிறிது நேரம் பரபரப்பானது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

loader