Brazils Open Table Tennis The Brazilian Player

பிரேசில் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியின் கடைசிச் சுற்றில் இந்திய வீரர் அமல்ராஜை, பிரேசில் வீரர் கால்டிரானோ ஹியூகோ பந்தாடினார்.

பிரேசில் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி பிரேசிலின் சாவோ பாலோ நகரில் நடைபெற்றது.

இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்தியாவின் அமல்ராஜ் மற்றும் பிரேசிலின் கால்டிரானோ ஹியூகோ மோதினர்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 12-14, 9-11, 7-11, 5-11 என்ற செட் கணக்கில் இந்திய வீரர் அமல்ராஜ், ஹியூகோவிடம் பரிதாபமாக தோல்வி கண்டார்.