Bracelet and diamond necklace if you win the Asian Squash Championship

ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் -19 போட்டி சென்னையில் இன்றுத் தொடங்குகிறது. இதில் வெற்றி பெரும் வீரர், வீராங்கனைகளுக்கு கோப்பையுடன் பிரேஸ்லெட் மற்றும் வைர நெக்லஸ் வழங்கப்படும்.

பத்தொன்பதாவது ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியத் தரப்பில் செளரவ் கோஷல், ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பலிக்கல், தமிழக வீரர் வேலவன் செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இப்போட்டியில் பங்கேற்பதாக இருந்த பாகிஸ்தான் வீரர்கள், நுழைவு இசைவு (விசா) விவகாரத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் அவர்களால் பங்கேற்க முடியாமல் போனது.

போட்டித் தரவரிசையின் ஆடவர் பிரிவில் ஹாங்காங் வீரர் மேக்ஸ் லீயும், அந்நாட்டு வீராங்கனை ஆன்னி அவ் மகளிர் பிரிவிலும் முதலிடத்தில் உள்ளனர்.

ஆடவர் பிரிவில் செளரவ் கோஷலும், மகளிர் பிரிவில் ஜோஷ்னா சின்னப்பாவும் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

இந்த போட்டிக்காக இந்திய அணியினர் இரண்டு வார முகாமின் மூலம் சிறப்பாகத் தயாராகியுள்ளதாக பயிற்சியாளர் அஷ்ரஃப் எல் கராகுய் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இதில், வெற்றி பெரும் வீரர், வீராங்கனைகளுக்கு கோப்பையுடன் சேர்த்து முறையே பிரேஸ்லெட் மற்றும் வைர நெக்லஸ் வழங்கப்படவுள்ளது.