aswin got first rank in bowler and all rounder

டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் அஸ்வின் தான் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.

புணே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 333 ஒட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியுற்றது. இருந்தபோதும், அது அஸ்வின், கோலி ஆகியோரின் தரவரிசையில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 74 ஒட்டங்கள் குவித்ததன் மூலம் தரவரிசையில் 46-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், இந்தியாவுக்கு எதிராக சதமடித்ததன் மூலம் 939 ரேட்டிங் புள்ளிகளைப் பெற்றிருக்கிறார். இதன்மூலம் அதிக ரேட்டிங் புள்ளிகளை பெற்றவர்கள் வரிசையில் 6-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

கோலி 873 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 848 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

புணே டெஸ்டில் முறையே 68 மற்றும் 31 ஒட்டங்கள் எடுத்த ஆஸ்திரேலிய வீரர் ரென்ஷா 18 இடங்கள் முன்னேறி தனது அதிகபட்ச தரவரிசையை (34) எட்டியுள்ளார்.

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஓ"கீஃப் 33 இடங்கள் முன்னேறி 29-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக 70 ஒட்டங்களை மட்டுமே கொடுத்து 12 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஓ"கீஃப் தனது அதிகபட்ச தரவரிசையை எட்டியுள்ளார்.

அஸ்வின் முதலிடத்திலும், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா, ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேஸில்வுட் ஆகியோர் 2-ஆவது இடத்திலும் உள்ளனர்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 4 இடங்கள் முன்னேறி 30-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஆல்ரவுண்டர் தரவரிசையில் அஸ்வின், ஷகிப் அல்ஹசன், ஜடேஜா ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 3 இடங்கள் முன்னேறி 4-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.