Asianet News TamilAsianet News Tamil

வங்கதேசத்தை துவம்சம் செய்தது இலங்கை அணி; 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி…

Binnie deportation to Sri Lanka 6 wickets
binnie deportation-to-sri-lanka-6-wickets
Author
First Published Apr 6, 2017, 11:17 AM IST


வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இலங்கை அணி, வங்கதேசத்தை துவம்சம்  செய்தது.

இலங்கை தலைநகர் கொழும்பில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் வங்கதேச அணி முதலில் பேட் செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ஓட்டங்கள் எடுத்தது வங்கதேசம்.

அந்த அணியின் செளம்ய சர்க்கார் 29, மொஸாதீக் ஹுசைன் ஆட்டமிழக்காமல் 34, மகமதுல்லா 31 அதிகபட்ச ஒட்டங்கள் எடுத்தனர்.

இலங்கைத் தரப்பில் லசித் மலிங்கா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய இலங்கை அணியில் கேப்டன் உபுல் தரங்கா 24, முனவீரா 8, குணரத்னே 17 ஒட்டங்களில் அவுட்டாக தொடக்க வீரரான குசல் பெரேரா 53 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 77 ஓட்டங்களை விளாசினார்.

இதனால், இலங்கை அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்கள் எடுத்து வெற்றிப் பெற்றதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

வங்கதேசம் தரப்பில் மோர்ட்டஸா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

குசல் பெரேரா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios